விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை: பெண் உள்பட 7 பேர் கைது
விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.


விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள பல்வேறு பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம்( டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜாளிப்பட்டி தென்னரசு(40) கோமங்களம் கண்ணையா(40) புதுப்பட்டி சின்னையா(53)பெருமாபட்டி தமிழரசி(40) கல்குடி ரங்கசாமி(28) தாளப்பட்டி சுந்தரம்(49) விராலிமலை சோதனைச் சாவடி பாபு(47) உள்ளிட்ட 7 பேரும் அரசு மதுபான பாட்டில்களை அனுமதியின்றி பெட்டிக்கடையில் பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததாக அவர்களை கைது செய்தனர், அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 35 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...